Skip to content

என் அனுபவங்கள்

பிரபஞ்சமும் நானும்

பிரபஞ்சம் என்பதை பல்வேறு விதமாக விளக்கப்படும் ஆனால் நான் எந்த கோணத்தில் பார்க்கிறேன் என்பதை , பல உண்மை கதைகளோடு இணைத்து கூறுவதோடு அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை நாம் கவனிக்க வேண்டும். அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தால் பல உண்மைகள் புலப்படுவதாக இருக்கின்றது.நான் கூறப்போவது ஒரு ஆன்மீகம் ஆகவும் இருக்கலாம் அல்லது அன்றாட வாழ்க்கையில் உறவுகளோடு ஏற்படும் சண்டை சச்சரவு ஆக இருக்கலாம் அல்லது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எந்த அளவு கடவுள் இருக்கின்றார் எந்த அளவு சூழ்நிலையை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம், எந்த அளவு சதவிகிதம் அது நமக்கு பயன்படுகின்றது என்பதையெல்லாம் படிப்படியாக பேசிக் கொண்டு போகலாம் என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய செயலாக இருக்கின்றது. வாழ்க்கையில் பல வலிகளையும் அனுபவித்து இருந்தாலும் பல வெற்றிகளையும் கொண்டு உள்ளேன். அந்த வெற்றிகள் சாதாரணமாக வந்தது இல்லை. நிச்சயமாக நானும் பிரபஞ்சமும் அந்த கடவுளும் மட்டுமே அதற்கு காரணம். இப்போது நான் முதல் முதலாக இப்பொழுது ஒரு மாதத்துக்கு முன் நடந்த ஒரு சிறிய நிகழ்வு ஒன்றை கூறுகின்றேன்.

(Yogi Ram Surat Kumar-யோகிராம்சுரத்குமார்-விசிறி சுவாமிகள் .) முதன்முதலில் 2 வருடத்துக்கு முன் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன் அதை எப்படி ஆரம்பிப்பது என்று வீடியோக்கள் பார்த்தபோது அமேசான் கே டி பி  கிண்டில் ரைட்டிங் பற்றி பல வீடியோக்கள் இருந்தன. அவற்றை எப்படி செய்யவேண்டும் என்று முழுமையாக தெரிந்து கொண்டு அதற்கப்புறம் செயலில் இறங்கத் துவங்கினேன். பல வருடங்களுக்கு முன்னால் நான் சிறுவயதாக இருந்த பொழுது எழுத்தாளர் பாலகுமாரனின் விசிறி ஆவேன். அந்த பாலு குமாரனே இந்த விசிறி சாமியாரை நான் ஆத்ம ரூபமாக வணங்க ஆரம்பித்ததற்கு காரணம். சிறுவயதில் பலரின் கதை புத்தகங்களை படித்தாலும் இவருடைய புத்தகங்கள் எனக்குள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது எப்படி பாலச்சந்தர் தன்னுடைய படங்கள் மூலம் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை எழுபதுகளில் ஏற்படுத்தியதோ அதுபோன்று வாழ்க்கைக்கு வேறுவிதமான பல கோணங்களையும், அதை வெவ்வேறு முறையாக கூட புரிந்து கொள்ள முடியும், அது சுவாரசியமாக சந்தோஷத்தை தரக்கூடியதாக கூட இருக்கும் என்பது மட்டுமல்ல… அவரின் கதைகளில் ஒரு பத்து வரிகள் கதை இருந்தால் இடையிடையே மனோதத்துவ ரீதியில் மனதின் வக்கிரங்களை, பிற்பட்ட வாழ்வாதாரங்களை கொண்டிருப்பவர்களின் அல்லது நடுத்தர வர்க்கத்தின் அல்லது மேல்தட்டு வர்க்கத்தின் சூழ்நிலை காரணமா அல்லது பிறப்பின் காரணமோ அவர்களுடைய அந்த வக்கிரமான நிலையோ அல்லது மேம்பட்ட மனநிலையை மனரீதியாக அவற்றை விளக்கி இருப்பார். யாரும் கண்டுபிடிக்காத யாரும் சொல்லாத விளக்கங்களை யாரும் பார்க்காத கோணங்களை அவர் படம் பிடித்து காட்டி இருப்பார். அவருடைய கதைகளை படித்ததில் காரணமாகவே இளம் வயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட சமுதாய தாக்கங்களை அவர் கூறிய முறையில் அவர் கொடுத்த விளக்கங்கள் படி அவற்றை நான் யோசிக்க ஆரம்பித்தேன். நடந்து முடிந்த விஷயங்களுக்கு மன ரீதி விளக்கங்களை தேடினேன். அந்த விளக்கங்கள் பாலகுமாரன் அவர்கள் கூறிய விளக்கங்களோடு ஒத்துப் போயிருந்தன. ஆகவே பல கதைகள் கூட சிறுவயதில் நான் எழுதி இருக்கின்றேன் ஆனால் அதை எப்படி பப்ளிஷ் செய்வது என்றெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது. அதோடு வாழ்வு என்னை அதலபாதாளத்தில் தள்ளி இருக்கின்றன. அவற்றிலிருந்து மேலெழுந்து என்னுடைய முயற்சிகளாக இருந்ததால் கதை எழுதுவது, கவிதை எழுதுவது, படம் வரைவது, ஒருவரைப் பார்த்து படம் வரைவது என எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். ஆனால் இந்த காலத்தில் யூடியூப் என்ற ஒரு விஷயத்துக்காக நண்பர் ஒருவர் ஏற்கனவே அவற்றை நடத்தி வெற்றியும் கண்டதால் அதை எப்படி செய்ய வேண்டும். இப்படி நெட்டில் போய் தேடணும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆகையால் நான் அதை தேடி போகும்போது இந்த அமேசான் kdp ரைட்டிங் தெரிந்துக்கொண்டேன். அதற்கு முன்னாலேயே ஒரு பெரிய கதை ஒன்று எழுதிக்கொண்டிருந்தேன். அதை நேரடியாக பப்ளிஷ் செய்வது என்று ஒரு முடிவில் இருந்தேன். ஆனால் இப்போது இதை பார்த்த பின்னால் ஒரு சிறு அமானுஷ்ய கதை ஒன்று எழுதலாம் இது எந்த அளவில் இருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளலாம் என்பதற்காக சித்ரா பௌர்ணமி என்று ஒரு கதையை எழுதத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு பாலகுமாரன் கதை ஒன்றை நெட்டில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் எனக்கு அந்த பாலகுமாரனின் எழுத்து வரிகள் என்னுடைய எழுத்து வரிகளுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்பதற்காக ஒரே ஒரு கதை தான் படித்தேன்.

அதற்குள் அவை நன்கு பிடித்துக்கொண்டது.அப்பொழுது பாலகுமாரன் கதைகளை தேடுவதற்காக அதைப்பற்றி டைப் செய்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது பாரதி பாஸ்கர் அவர்கள் பாலகுமாரன் அவர்களிடம் பேட்டி எடுத்திருந்தார். அவர் பல விஷயங்களை ராஜராஜசோழனின் கதையை அவர் எழுதியதிலிருந்து அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் யோகிராம்சுரத்குமார் அவரை அவர்கள் சந்தித்தது, அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்றெல்லாம் கூறி இருந்தார். அவர் கூறும் பொழுது யோகி ராம்சுரத்குமார் என்று மூன்று முறை சொல்கிற அந்தப் பாட்டை அவர் படித்தார். அந்த கதையை எழுதிக் கொண்டிருந்த பொழுதே பாலகுமாரன் அவர்களையும் பரஸ்பரமாக என்னுடைய குருவாக நினைத்து அவருக்கு சமர்ப்பிக்க…. அந்தக் கதையை k d p ஃப்ரண்ட் பேஜ் டிசைன் செய்வதிலிருந்து முறைப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தேன். பாலகுமாரன் அய்யா அவர்களைப் போன்றே நாமும் யோகிராம்சுரத்குமார் மனதில் நினைத்து அதே பாடலை பாட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அவர் ஜீவ சமாதி ஆகிவிட்டார் என்பதையும் அந்த ஜீவசமாதி திருவண்ணாமலையில் ஆசிரமம் ஆக இருக்கின்றது என்பதையும் நெட்டின் மூலமாக தெரிந்துகொண்டேன். என்றாவது ஒருநாள் நாம் அங்கு போகவேண்டும் ஒரு எழுத்தாளனாக! பாலகுமாரன் அவர்களையும் நினைத்துக்கொண்டு அவர்களுடைய ஆத்மாவையும் அந்த இடத்திலேயே நாம் மனதால் நினைத்து அந்த ஆசிரமத்தில் அந்த புத்தகத்திற்கு நன்றி கூற வேண்டும். அது நன்றாக உலகம் முழுக்க பிரசித்தி பெற வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின் அதை அப்லோட் செய்த பின்னாடி அதை எத்தனை பேர் பார்த்தார்கள் அதிலிருந்து பணம் வருகின்றதா என்றெல்லாம் எனக்கு டெக்னிக்கல் விஷயங்கள் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் யூடியூபே ஆரம்பித்துவிட்டு 2018 ல் ஆரம்பித்ததால் அதை you-tube ல் பெரும் கடினமான ஆண்டாக 4000 hours பார்த்து,1000 subscribers இருந்தால் மட்டுமே சேனல் அப்ரூவல் ஆகும் என்ற நிலை. ஆகையால் அதோடு தினமும் போராடுவது எனக்கு வேலை ஆகிப் போனதால் இந்த kdp அப்லோட் செய்த சித்ராபவுர்ணமி என்ற கதையை என்ன ஆனது என்று கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதை நான் அப்லோட் செய்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. you-tube ஆரம்பித்து எட்டாவது மாதத்தில் சேனல் அப்ரூவல் ஆகிவிட்டது. ஆகையால் அதை துரிதமாக மேம்படுத்த அதன் மேலேயே என் கவனம் இருந்தது. ஒரு வருடம் கழித்து you-tube இருந்து பணம் வர ஆரம்பித்தது. இந்த சித்ரா பௌர்ணமி என்ற கதையை ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் தான் ஆகின்றது. அதை எழுத ஆரம்பித்தது யூடியூப் ஆரம்பித்தபோதே ஆரம்பித்து பாதியில் நிறுத்திவிட்டு, அதற்குப்பின் அதற்கு அடுத்த வருடம் வரும் சித்ரா பவுர்ணமிக்கு அப்லோட் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் போன வருட சித்ரா பவுர்ணமி அன்று அதாவது 2019 அன்று publish செய்தபோது யோகிராம்சுரத்குமார் அவர்களையும், திரு பாலகுமாரன் அவர்களையும் நான் மனதார நினைத்து அவர்களுக்கு சமர்ப்பித்து அந்த சித்திரா பௌர்ணமி கதையை வெளியிட்டேன் அதற்குப் பிறகு 2020இல் பிப்ரவரி மாதம் நான் சில பூஜைகளை செய்து விட்டு என்னுடைய மகனின் உதவியோடு அந்த சித்ரா பவுர்ணமி கதை  என்ன ஆனது என்று அமேசானில் போய் kdp அக்கவுண்டில் பார்த்தபோது வெவ்வேறு நாடுகளிலிருந்து படித்திருக்கிறார்கள். ஒரு சிறு தொகையை என்னுடைய என்னுடைய பேங்க் அக்கவுண்டிற்கு வந்து இருக்கின்றது என்பதையும் தெரிந்துகொண்டேன். அதற்கு ஒரு நான்கு நாள் கழித்து வேறுசில பூஜைகளை செய்து ஏனென்றால் அது தொடர்ந்து பூஜை நாட்களாக இருந்தன. என்னை வளர்த்த தாயின் நினைவு நாளும் பிப்ரவரி 3 ஆகும். நான் ஒரு 15th feb அவசரமாக ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு படியிறங்கி வண்டியை ஸ்டார்ட் பண்ண தொடங்கினேன். அப்பொழுது தெருவில் அவ்வளவாக எனக்கு பழக்கமில்லாத எப்போதோ ஒருமுறை பேசுகின்ற பெண்மணி கையில் ஒரு கருப்பு நாய் கூட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக பைரவர் பக்தியோடு இருக்கின்றேன் என்பது ஊருக்கே தெரிந்த கதை. அவர்கள் என்னைப் பார்த்து கோயிலுக்கு போகிறீர்களா என்று கேட்டார்கள். எப்போதோ ஒரு முறை பேசுவார். ஆனால் என்னுடைய சேனல் ஆன்மீக சம்பந்தப்பட்டது என்பது கூட அவருக்கு தெரியாது. நான் மிகவும் அவசரமாக இருக்கின்றேன் என்று தெரிந்தும்… நீங்கள் திருவண்ணாமலைக்கு போகவில்லையா என்று கேட்டார். ஏன் திருவண்ணாமலைக்கு போக வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர் நாலு மணி நேரம் தான் ஆகப்போகின்றது சென்னையிலிருந்து போவதற்கு என்றார். நான் ஐயப்பன் கோவிலுக்கு அவசரமாக சென்று கொண்டிருக்கின்றேன் கோயில் மூடுவதற்குள் போகவேண்டும் என்றேன். அவர் மறுபடியும் கோயம்பேட்டில் பஸ் இருக்கின்றது அதில் போனால் போய்விட்டு அன்றைக்கே கூட திரும்பிவிடலாம். இரவு முழுக்க பஸ் கூட இருக்கின்றது என்றார்.அந்த நாய் உடலை இப்படியும் அப்படியுமாக படபடவென்று ஆட்டியது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது அந்த நாய் ஏதோ என்னை பார்த்து இன்னும் புரியவில்லையா என்ற ஒரு அதட்டி கேட்பது போலவே அந்த உடலசைவு இருப்பதாக எனக்கு பட்டது. உடனே நான் அந்த அம்மாவிடம் அதனால் என்ன நான் சிறுவயதில் டூருக்கு போயிருக்கின்றேன். பள்ளியில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் இப்பொழுது கூட போனால் போகிறது ஒருவேளை கடவுள் உங்கள் மூலமாக என்னை போக சொல்கிறாரோ என்னவோ என்று அந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு ஒரு அவசரகதியில் கூறினேன். போனால் போகிறது என்று நான் சொன்னவுடனே அந்த நாய் மறுபடியும் படபடவென்று அதேபோல் உடனே அசைத்தது. நான் போகிறேன் சீக்கிரமாகவே போகிறேன் பார்க்கலாம் அப்படித்தான் போனால் போகிறது விட்டு கிளம்பிவிட்டேன் என் மனதில் இன்னொரு மாதம் இரண்டு மாதம் கழித்து போகலாம் என்பதைதான் மனதில் வைத்திருந்தேன். அதைத்தான் போனால் போகிறது என்று கூறினேன். ஏனென்றால் வேறு ஒரு குருஜி எண்ணெய் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகச் சொல்லி இருந்தார். அதற்காக தேவையான பணம் இன்னமும் கிடைக்காமல் இருந்தது அங்கு போகாமல் மற்ற தீர்க்கதரிசன இடங்களுக்கு எல்லாம் ஏன் போவது அதையெல்லாம் முதலில் முடித்துவிட்டு அந்த குருஜி எங்களுக்கு சொன்னதை முதலில் முடித்துவிட்டு,அந்த குருஜியிடம் போய் வந்துவிட்டோம் என்று சொல்லிவிட்டு அதன்பின் போகலாமே என்று முடிவு செய்து இருந்தேன். இந்த அம்மா சொல்லும்போது கூட ஒருநாள் போகலாம் என்றுதான் நினைத்தேன்.கோவிலுக்கு சென்று திரும்பி வீட்டுக்குள் சென்று உடனே you tube வீடியோவில் சிவராத்திரி பற்றி வீடியோ போடுவதற்காக என்று சிவராத்திரி என்று பார்ப்பதற்காக தினசரி காலண்டரை ஒவ்வொரு தாளாக எடுத்து தள்ளினேன். 21ஆம் தேதி சிவராத்திரியன்று இருக்கின்றது. 2௦ ம் தேதி திருவண்ணாமலை-யோகி ராம்சுரத்குமார் அவர்களின் நினைவு நாள் என்று இருக்கின்றது. ஓ அப்படி என்றால் யோகிராம்சுரத்குமார் அவர்கள்தான் என்னை திருவண்ணாமலைக்கு அழைக்கிறார். போகச் சொல்லுகிறார் என்று ஒரு கணம் தோன்றியது. எல்லோரிடமும் நான் கேட்டு பார்த்து விட்டேன் எனக்கு துணைக்கு யாராவது வாருங்கள் என்று கணவரை கேட்டாலும் ஒத்துக்கொள்ளவில்லை. நண்பர்களை கேட்டாலும் ஒத்துக்கொள்ளவில்லை ஆகையால் நான் எப்படியாவது போகவேண்டும் நான் போய்விடுவேன். நிச்சயமாக போகத்தான் போகிறேன் என்பது மட்டும் புரிகிறது. எப்பொழுதுமே நான் வணங்கும் சொல்கேட்ட பிள்ளையாரிடம் ஒரு வேண்டுதல் வைத்துவிட்டேன். அந்த 20ஆம் தேதிக்கு மிகச்சரியாக நான் போய் விட வேண்டும் அதற்கு நீங்கள்தான் எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும் பிள்ளையாரே 11 முறை வலம் வந்து 11 ரூபாய் செலுத்துகின்றேன் மற்றும் பால் அபிஷேகத்துக்கு வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் கூறியிருந்தேன். அப்படி சொன்னால் அவர் செய்வார் என்பது வேறொரு சூட்சும விஷயமாக இருக்கிறது. நான் தனியாக செல்லலாமா? அது எப்படிப்பட்ட இடம்? போய் திரும்பி வந்துவிட முடியுமா என்பது எல்லாம் கொஞ்சம் பயமாக இருந்தது. அதிசயமாக நான் கிரிவலம் போய் தான் ஆவேன் என்று கூறிக்கொண்டு இருந்ததை என் மகன் தெரிந்து கொண்டு நாம் உடன் போனால் கிரிவலம் போகாமல் அழைத்து வந்துவிடலாம். இந்த வயதில் கிரிவலம் போனால் எனக்கு ஏற்கனவே முதுகுவலி பிரச்சினைகள் இருக்கின்றன மற்றும் தனியாய் போய் இரவு திரும்ப நடு ராத்திரி ஆகிவிடும் அதனால் மேலும் ஏதாவது பாதிக்கக்கூடும் என்று என நினைத்து என்னுடன் வந்து அந்த கிரிவலம் போகும் விஷயத்தை தடுக்க வேண்டும் ஆனால் என்னை நீ போகக்கூடாது என்று தடுக்கக் கூடாது… அது என்னுடைய விருப்பமாக இருக்கிறது என்பதால், அவனுக்கு அவ்வளவாக ஆன்மீகத்தில் நாட்டம் இல்லை என்றாலும் என்னுடைய விருப்பத்தை தடுக்கக்கூடாது நான் போவது நிச்சயமாக தெரிகின்றது என்ற காரணத்தால் கடைசி நிமிஷத்தில் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டான். கரெக்டாக 20 ஆம் தேதி காலையில் நாங்கள் ஒன்பது மணி வாக்கில் கிளம்பி பஸ்ஸில கோயம்பேட்டில் சென்று கிளம்பிச் சென்றோம் இரவு வருவதற்கு 12க்கு மேல் ஆகிவிட்டது. அந்த ஆசிரமத்தில் நான் என் மகன் இருவரும் அந்த 20-ஆம் தேதி இருப்போம்  என்பது நிச்சயமில்லை. தெருவில் நாயை பிடித்துக் கொண்டு வந்து சொன்னா அம்மா சொன்ன ஆறாவது நாள் நாங்கள் அந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அங்கு சென்று வந்த பின்னாடி கூட நிறைய விஷயங்கள் இந்த நாள் இந்த போஸ்ட் தான் நான் போட வேண்டும் என்று உணர்த்தியது . அவருடைய புத்தகம் ஒன்றை நான் அங்கிருந்து வாங்கி வந்து இருந்தேன் அவர் ஸ்கூலில் பெரிய ஆசிரியராக இருந்து இருக்கின்றார் ஆகையால் அந்த ஒரு எழுத்தாளராக வருகின்ற பாலகுமாரன் அவர்களுக்கும், அவருடைய குருஜி ஆக அவருடைய அந்த ஞானத்தைப் பெறுவதற்கு அந்த ஒரு எழுத்து உலகம் அந்த வேறு ஒரு சில விளக்கங்களோடு அதன் மூலமாக எனக்கு சில விஷயங்களை உணர்த்துவதாக ஒரு துண்டுக் காகிதத்தில் அல்லது ஒரு பேப்பரில் ஓர் ஏதோ ஒரு சில விஷயங்களைக் உணர்த்தி, அந்த திருவண்ணாமலைக்கு போய் வந்ததில் இருந்து நான் போடுகின்ற போஸ்ட் ஆகட்டும் நான் எழுதுகிற எழுத்துக்கள் ஆகட்டும்.. விஷயங்கள் எதுவுமே அவர் கூறி என்னை செய்வதாக இருக்கின்றது இல்லை என்றால் ஒரு வாரம்கூட என்னை நான் என்னதான் எல்லாவற்றையும் எழுதி ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி எல்லாம் செய்துவிட்டு அப்லோட் பண்ண போனாலும் அன்று போட வேண்டாம் என்று என்னை எப்படியோ இந்த நாள் இதைத் தான் போட வேண்டும் என்பதை அவரே உணர்த்தி கொண்டு இருக்கின்றார். இன்று முதல் முதலாக my experiences page ல் போடும் ஒரு போஸ்ட் ஆக இது இருக்கின்றது. வேறு சில அமானுஷ்ய விஷயங்களை அல்லது வேறு ஆன்மீக விஷயங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்