எதிரிக்கு தெரியாது,அவன்தான் உன்னை வெற்றி பெற செய்தான் என்று!

(part-1) Tamil and English translation in same page

உண்மை கதைகள்

உலகிலுள்ள மிகச்சிறந்த புகழ்பெற்ற சாதனையாளர்கள், விஞ்ஞானிகள் யாருமே கொஞ்சம் அல்லது அதிகம் மனநலம் பாதித்தவர்கள் தான். சிலருக்கு அதிகம் பாதிக்கும். சிலருக்கு குறைவாக பாதித்திருக்கும். ஏதோ ஒரு இடத்தில் பட்ட அவமானம் ,வறுமை,தன் உடம்பின் மீது யாரோ ஏற்படுத்திய காயம், மனதை காயப்படுத்தியது இப்படிப்பட்ட மன வலிகளை சதா நினைத்து அதனால் மன பிறழ்ச்சி ஏற்பட்டிருக்கும். மன பிறழ்ச்சி என்றால் ஒரு விஷயத்தை 100 பேருக்கு ஒரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினால், சிலருக்கு மட்டும் அதிக கோபம் அல்லது அதிக சந்தோஷம் ஏற்படும்.ஆனால் யாரையும் தாக்காமல், பொருட்களை உடைக்காமல் தவறாக நடந்து கொள்ளாமல் இருப்பார்கள். ஆகையால் உலகம்  அவர்களை மன நலம் பாதித்தவர்  என்று எடுத்துக் கொள்வதில்லை.அதற்கான  சான்றும் இருக்காது. மருத்துவச் சான்றும் இருக்காது. உலகின் பாதி பேர் இப்படிப்பட்ட வரே.
ஆனால் இந்த பாதிப்புகள் அதிகமாகி சதா அதே சிந்தனையில் உழன்று கொண்டிருப்பவர்கள் 2  வகையான பாதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். 

ஒன்று : அருகில் இருப்பவன் பெரிய பணக்காரன் ஆக இருந்தால் , தன்னால் சாப்பிடக்கூட முடியாத அளவு பெரும் வறுமையில் வாடினார் என்றால் தவறு செய்தாவது  அந்த உணவு தனக்கு கிடைக்கும்படி செய்து கொள்கின்றான். இரண்டு: அவனுடைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அதையெல்லாம் யோசித்து அதன்படி வர பார்க்கிறான்.

 பிரசித்தி பெற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் மிகுந்த மன வலிக்கும், மிகுந்த போராட்டத்துக்கும் உண்டாகி இருப்பார்கள். உதாரணமாக தன் மனைவி கேன்சரில் இருந்ததால் கேன்சர் மருந்து கண்டுபிடித்ததும் இப்படிதான் . இங்கு எதிரி என்று நான் சொல்வது மனிதர்களாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம். தனக்கு ஏற்பட்ட ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலை ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பதற்கு கூட தன்னை உந்துகிறது. ஆகையால் அந்த வலியை ஏற்படுத்திய அந்த விஷயம் கூட எதிரி தான் என்று கூறுகின்றேன். 

உதாரணமாக பணிந்திரசாமா என்பவர் பெங்களூரில் பெரும் மென்பொருள் நிறுவனத்தில்  வேலை செய்து வருகின்றார். மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம். அவர் ஒருநாள் ஒரு  இக்கட்டை சந்திக்கின்றார்.  அந்த  இக்கட்டான சூழ்நிலை ஒரு  எதிரியாகும். விடிந்தால் தீபாவளி, பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். நான்கு மணி நேரம் தேடியும் பஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஆகிவிட்டது . அனைத்து ஏஜெண்டிடமும் பேசியாகிவிட்டது. கிடைக்காமல் வீடு திரும்புகிறார். மறுபடி மறுபடி யோசிக்கிறார். நம்மை போல் எல்லோரும் வீடு திரும்பவில்லையே?

சிலருக்கு மட்டும் கிடைக்குமா என ஒரு பெரும் போராட்டம் மனதில் ஏற்படுகின்றது. அப்போது எந்த வண்டியில் எத்தனை சீட்டு உள்ளது என்று எல்லோருக்கும் எல்லா நேரமும் தெரிந்தால் எப்படி இருக்கும்? இதற்காக ஒரு மென்பொருளை உருவாக்க முடியாதா என்று யோசிக்கிறார். ஊரெல்லாம் தீபாவளி பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது. ஊருக்கு போக முடியாத நிலையில் ஒருபக்கம் காய்ச்சல்.  பிட்ஸ் பிலானியில் தான் படித்த எல்லா மென்பொருள் விஷயத்தையும் பீனியல் கிளாண்ட் எடுத்துக் கொடுக்கின்றது. பஸ் முதலாளிகளுக்கு மென்பொருள் எழுதும் தன் யோசனையை ஆந்திரா நண்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றார். அவர்களும் இவற்றோடு இணைந்து கொள்ள… கம்பெனிக்கு 3 நாள் லீவு போட்டுவிட்டு புதிய தொழிலுக்கான ஆரம்ப பிள்ளையார் சுழி போடுகின்றார்கள் அதுதான் ரெட் பஸ் (Red Bus) எப்படி எல்லாம் ஜெயித்தார்கள் என்று ஆறு ஸ்டார்ட்அப் கம்பெனிகளின் சுருக்கமான கதைதான் “தி ஸ்டார்ட்அப் டைரிஸ்” (The startup Diaries )என்கிற புத்தகம்  ஆகும். 

இதை ஏன் எதிரியாக பாவிக்க வேண்டும் என்றால் எதிரி என்ற நிலை ஒரு நெருப்பு ஆகும். அதையே ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியும். அறிவுரை என்று எடுத்துக்கொண்டால் அது இனிப்பு தான். அது அந்த நிமிடம் சாப்பிட்டு   முடிந்து விடும். அறிவுரையாக எடுத்து கொண்டால் அடுத்த முறை ஜாக்கிரதையாக இருக்க முடியும் அவ்வளவுதான்.

அதுமட்டுமல்லாமல் மனம் நோகும்படி உருவத்தை கேலி செய்தல், அறிவை  கேலி செய்தல், ஒரு உதவி செய்துவிட்டு இது என்னால்தான் உனக்கு கிடைத்தது என்று அடிக்கடி கூறி அவமானப்படுத்துதல், ஒருவர் மீது இல்லாத பழிகளை சுமத்துதல், தவறான உறவுகள் இருந்ததாக  கெட்டபெயர் ஏற்படுத்துதல், எதிரிலேயே மறைமுகமாக தாக்குதல் இவைகளை அப்படியே மன்னித்து விடவேண்டும் என்று கிடையாது ஆனால் அவர்களை அதற்கு நேரடியாக பதிலுக்கு அதே தவறை செய்வதோ அல்லது வார்த்தைகளால் காயப்படுத்துவது உடம்பை வருத்தி தண்டனை கொடுப்பதோ கூடாது. 

ஆனால் அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளை வெற்றிகளாக மாற்ற வேண்டுமென்றால், தினமும்  நமக்கு சமூகத்தில் ஏற்படுகின்ற மன வலிகளை நாம் எதிரியாக கொண்டால்தான் ஜெயித்தல் என்ற ஒரு விஷயம் நடக்கும். 

ஆகவேதான் எதிரிக்கு தெரியாது நாம் வெற்றி பெற்றதன் காரணம் அவர்கள்தான் . விதை போட்டது அவர்கள்தான் இது முதல்  பாகம் என்பதால்

 பிரசித்தி பெற்றவர்கள் உதாரணத்துக்கு சொன்னேன் ஆனால் இதே தலைப்பில் பார்ட் 1 பார்ட் 2 என்று என் வாழ்வில் உள்ள அல்லது என் நண்பர்களிடம் உள்ள நிஜக் கதைகளை, வலிகளை, அவமானங்களை எப்படி ஜெயித்தார்கள் அல்லது எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதற்கான சூட்சுமங்கள் குறிப்பாக சாதாரண மக்களிடம் அன்றாடம் ஏற்படும் சண்டை சச்சரவுகளை எதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், எதை மன்னித்து விட வேண்டும் என்ற விளக்கங்களோடு, சில இடங்களில் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகளின் ஒப்புமைகளோடு  இந்த ப்ளாக்கில் பதிவிட இருக்கின்றேன்.எனக்கு ஓ இந்திய பெண்ணே (oh indiapenne) என்று யூடியூப் சேனல் இருந்தும், இந்த விஷயங்களை நான் இங்கு பதிவிட காரணம் இதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதே பக்கத்தில் வெளியிடுவேன். இந்தியா முழுக்க இருப்பவர்கள் 90% இப்படிபட்ட  பாதிப்புகளை பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் உலகில் வாழும் எல்லா இந்தியர்களும், இதை ஒரு கதை போல படிக்கவும் அதேசமயத்தில் வெற்றியை ஊக்குவிப்பதாகவும் இருக்கும் .

12 thoughts on “எதிரிக்கு தெரியாது,அவன்தான் உன்னை வெற்றி பெற செய்தான் என்று!”

Kalyani உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன