எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி வெற்றி பெறுகின்றாய் என்று (எதிரி 2 )

  • by
  • 2 Comments

முதல் பகுதியில் நான்” எதிரிக்கு தெரியாது நீ அவனால்தான் வெற்றி பெற்றாய் என” என்று தலைப்பு கொடுத்திருந்தேன் இரண்டாம் பகுதியில்  நன்கு நீங்கள் கவனிக்க வேண்டும் “எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி எல்லாம் வெற்றி பெற்றாய்” என என்று கூறி இருக்கின்றேன் இந்த வித்தியாசத்தை ஒவ்வொரு பகுதியிலும் கவனியுங்கள்

உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் எதிரி என்று ஒன்று உண்டு..

அது உயிருள்ள விஷயமாகவும் இருக்கலாம். உயிரற்ற விஷயமாகவும் இருக்கலாம். உயிரற்ற விஷயங்களுக்கு பின்னாலும் உயிருள்ள விஷயம்தான் இருக்கின்றது .ஆனால் அது நம் கண்களுக்கு தெரியாது. அதுதான் அமானுஷ்யம். வானுலகில் உள்ள ஆத்மாக்கள் அவை .அந்த ஆத்மாக்கள் உங்களோடு இந்த ஜன்மத்தில் வாழ்ந்து மறைந்ததாக இருக்கலாம். அல்லது போன ஜென்மத்தில் அல்லது உங்கள் பெற்றோரோடு வாழ்ந்த ஆத்மாக்கள்.

 அந்த ஆத்மாக்கள் உங்கள் தந்தை தாயோடும் அல்லது உங்களோடும் பகைமை கொண்ட ஆத்மாக்கள். அந்த ஆத்மா உங்களால் பாதிக்கப்பட்டோ

 அல்லது உங்கள்  தாய் தந்தையால் பாதிக்கபட்டு அதனால் பகை கொண்ட  ஆத்மாக்கள். அப்படியில்லாமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷயம் ,கிடைக்க விரும்பிய விஷயம், ஆசைப்பட்ட விஷயம் உங்களுக்கு மட்டும் கிடைத்து அவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்.

அதில் உங்கள் தவறு எதுவும் இல்லை என்றாலும் தன் அருகில் உள்ளவரின் ஏக்கம் ஒரு விஷத்துக்கு சமமானது. அதுவும் ஒரு வகை பொறாமையே… அடுத்தவன் மேலுக்கு வரக்கூடாது என்பது  தர்மமற்ற பொறாமை. ஆனால் கடவுளின் சாம்ராஜ்யத்தில் ஒருவன் விரும்பிய விஷயம் அவனுக்கு கிடைக்காமல் எதிரில் இருப்பவனுக்கு கிடைத்தால், அதனால் அவன் உள் மனம் அழுகிறது. ஆனால் எதிரில் இருப்பவனிடம் வாழ்நாள் முழுக்க அதை வெளிப்படையாக சொல்லவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை என்றால் அந்த ஏக்கம் எனும் விஷயமும் ஒரு வகை  பொறாமை என்றாலும்… அந்த பொறாமையை கடவுள் தர்மம் சார்ந்த பொறுமையாகவே எடுத்துக்கொள்வார். இந்த தர்மம் சார்ந்த பொறாமைகளை தான் கடவுள் மறு ஜென்மத்தில் அதே வலியை உனக்கு கொடுத்து போன ஜென்மத்தில் நீ அனுபவித்த சந்தோசத்தை அவனுக்கு தருவார்.

 இது சில சமயம் இந்த ஜென்மத்திலேயே கூட நடக்கலாம்.  ஆக உயிர்வாழும் எதிரிகள். வானில் வாழும், பிரபஞ்சத்தில் வாழும்  ஆத்ம ரூப எதிரிகள் என்று  உண்டு. இதனால்தான் சித்தர்கள் முனிவர்கள் பிறவாநிலை, அதாவது மனிதனாக இதுவே கடைசியாக இருப்பதைத்தான் அவர்கள் மோட்சம் என்று கருதுகிறார்கள். அதாவது மனிதனாக பிறக்காமல் போவதே மோட்சம், சொர்க்கம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

 ஆனால் நான் என்னுடைய ஆராய்ச்சியில் நான் கருதுவது மனிதனாய் பிறப்பது அரிது. மனிதனாய் பிறந்து தன்னை சுற்றி இருப்பவர்களை  ஜெயிப்பது ஒரு அருமையான விளையாட்டு என்றும், ஆனால் அதை கையாளுவது துறவு மேற்கொள்வதை விட,பிறவா நிலையை விட மிக கடினமான …ஆனால் சுவாரசியமான ஒரு கலை.

உலக வாழ்வில் இருந்து கொண்டு உலக சுக போகங்களை நேர்மையான  கோட்பாடுகளோடு  அனுபவித்துக் கொண்டு, அருகில் இருப்பவன் யார்? உன் மீது நல்லெண்ணம் வைத்திருப்பவர் யார் ? என்பதையும்… யார்  நேரடியாக பின்னுக்குத் தள்ளும் சந்தர்ப்பத்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கணக்கிட தெரிந்து கொண்டாலே முதல் கட்ட வெற்றி. பின் இந்த  பூமியில் உள்ள ஆத்மா.. வானிலுள்ள ஆத்மா இரண்டையும் எப்படி நீ வழிநடத்த போகிறாய் என்று தெரிந்துவிட்டால்… நீதான் கடவுள்! எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும் அந்த ஆத்மாக்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.

 அதாவது இதற்கு முன்னால் நான் சொன்னது … அவன் போன ஜென்மத்தில் உன்னை பார்த்து ஏங்கியதால்தான், இந்த ஜென்மத்தில் கடவுள் உன்னை அந்த இடத்துக்கு தள்ளுவார்  என்று சொன்னேன் இல்லையா?.

அந்த  சூட்சும விஷயத்தை ஜெயித்து எல்லா ஜென்மங்களிலும்  நீ விரும்பியபடி வாழ வழிவகுக்கும் என்ற ஒருவகை மேஜிக் ஆகும். இந்த மேஜிக் நம்பர் 1 தான் நீ எப்படி எல்லாம் வெற்றி பெறுகின்றாய்  என  எதிரிக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பது. அவன் கண்ணில் பட்டால்தான்  அவனுக்கு வலிக்கின்றது. அவனுடைய வலி அடுத்த ஜென்மத்தில் உன்னை அவன் இடத்துக்கு தள்ளுகிறது.

இப்படி  வெறும் வலியோடு நிற்காமல் நேரடியாக வார்த்தைகளாலோ ,செயலாலோ தாக்குபவருக்கு கடவுள் அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு உங்கள் இடத்தை தருவதில்லை. ஏன் என்றால் அது தர்மம்தவறிய பொறாமை ஆகும் . ஆக நீ எதிரிக்கு தெரியாமல் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் உன்னை சுற்றி தருமம் உள்ள ,தருமம் தவறிய போட்டியாளர்கள்  யாரென்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும் வாழ்நாள் முழுவதும்…. ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் பகுதியில் நான் எதிரிக்கு தெரியாது நீ வெற்றி பெற்றது அவனால் என்று கூறியது வேறு இது எதிரிக்கு  தெரியக்கூடாது என்பது வேறு என்றும், மேலும் பல சூட்சுமங்களை இந்த எதிரி என்ற ஒரு தலைப்பை வைத்தே பல விதமான சூட்சுமங்களை நான் உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்

2 thoughts on “எதிரிக்கு தெரியக்கூடாது நீ எப்படி வெற்றி பெறுகின்றாய் என்று (எதிரி 2 )”

Kalyani உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன